”ஏய் உள்ளே என்ன பண்ற? சூப்பர் மார்க்கெட் போகணும் லேட் ஆகுது”.
“டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, நவீன் பாத்ரூம் போய்ட்டு இருக்கான்”.
“ஆமா வெளியில போகும் போது தான் அவனுக்கு எல்லாம் வரும்”.
“சரி, மறக்காம லாக் பண்ணி கீ எடுத்துக்கோ!”
சூப்பர் மார்க்கெட்டினுள் நுழையும் போது கதவிலிருந்த வந்த குளுமையான
காற்று கோபியின் முகத்தில் பட்டது. தனக்கே உண்டான அவசர பாணியில்
ஒருபுறமிருந்த தள்ளுவண்டியை உள்ளே தள்ளிச் சென்றான்.
”நவீன், உங்கப்பாவுக்கு பொறுமையே இல்லடா. எப்டி போறாரு பாரு”.
நவீன் தன் மழலை மொழியில், அப்பா பேட் ஃபெல்லோ என்று செல்லமாக சொன்னான்.
”காயத்ரி, பர்சேஸ் முடிச்சிட்டு நைட் அப்பிடியே ஹோட்டல்ல சாப்பிட்டுப் போலாம்”.
“ஓகே கோபி, இன்னைக்கு வீட்டு பக்கத்துல இருக்கிற நார்த் இண்டியன் ரெஸ்ட்ரன்ட்ல நாம சாப்பிட்டதே இல்ல, சோ அங்க ட்ரை பண்ணலாம்”.
உள்ளே நுழைந்தபின் எங்கு பார்த்தாலும் நியூ இயர் ஆஃபர், இதை
என்னும்போதே கோபியின் கை பாக்கெட்டிலுள்ள கடன் அட்டையை தடவிச் சென்றது.
ம்ம் இன்னைக்கு எவ்வளவு ஆகும்னு தெரியல, வழக்கம்போல ஃபோர் டிஜிட்
போகாமிருந்தா சரி என்று எண்ணிக் கொண்டே சென்றான்.
“அப்பா, எனக்கு அந்த மெக்குயின் கார் வேணும். என்கிட்ட கிரீன் காரே இல்ல!”
“கடைக்கு வந்தா போதும் எப்ப பார்த்தாலும் இது அது வேணும்னு ஒரே
டார்ச்சர். போன வாரம்தான் ஒரு கார் வாங்கின, அதுக்குள்ள இன்னோரு கார்…அப்பா
சொன்ன பேச்சுக் கேட்டு சைலண்டா இரு, இல்லே நல்லா அடி வாங்குவே. வர வர உன்
தொல்லை அதிகமாயிருச்சு”.
நவீன் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அருகிலிருந்த சிறுவனின் கையிலிருந்த கார் பொம்மையை வெறித்துப் பார்த்தான்.
“டேய் ஏன் அழுதிட்டு இருக்க? கடைக்கு வந்தா சைலண்டா இருக்கமாட்டே நீ!”
“அம்மா, அப்பா என்னை திட்டிட்டே இருக்காரு. நான் மெக்குயின் கார் கேட்டேன் அப்பா நோ சொல்லிட்டாரு”
”நவீன் மறுபடியும் அழுகையை ஆரம்பிக்காதே. ஒழுங்கா குட் பாய்யா இரு, அம்மா அப்பாகிட்ட சொல்றேன்”.
“கோபி உன்கிட்ட க்ரே கலர் சர்ட் இல்ல, இந்த சர்ட் பாரு ரொம்ப நல்லா இருக்கு”.
”ரெண்டு வாரம் முன்னாடிதான் ஒரு சர்ட் எடுத்தேன். ஆல்ரெடி நிறைய சர்ட் இருக்கு, சோ இப்ப வேணாம்”.
”நல்லாயிருந்தா எடுக்கவேண்டியதுதானே, அப்புறம் நாம தேடும்போது வேணுங்கிற கலர் கிடைக்காது”.
No comments:
Post a Comment