ஆசிரியர் தினக்கொண்டாட்டத்தில் மாணவர் தலைவர் உரை
செந்தமிழே வாழ்க!
எந்தமிழர் வாழ்க !
மதிப்பிற்குரிய இவ்வார கடைமையாசிரியர் திருமதி சாந்தி அவர்களே, அன்பிற்கும்
பண்பிற்கும் உரிய தலைமையாசரியர் அவர்களே, எங்கள் பாசத்திற்குரிய
துணைத்தலைமையாசிரியர்களே, நேசத்திற்குரிய ஆசிரிய ஆசிரியைகளே, என் சக மாணவர்
தோழர்களே, உங்கள் அனைவருக்கும் இவ்வினிய காலை வேளையில் என் வணக்கங்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நன்னாளில் மாணவர்கள் சார்பில் ஆசிரியர்
தின உரை ஆற்றுவதற்கு எனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பை மிகப் பெருமையாகக்
கருதுகிறேன். ஆசிரியப் பெருந்தகைகளே, உங்கள் அனைவருக்கும் என் ஆசிரியர் தின
வாழ்த்துக்கள்.
மாணவர்களே,
இன்று மே
16. நமக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைக்குஆசிரியர் தினஆசிரியத் திலகங்களைக்கு
நாம் நன்றிக் கடன் செலுத்தும் இனிய ஆசிரியர் தினநாள். முதலில் இத்தினம்
எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நம்மை, ஒரு
புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை
உருக்கி, நம் பாதையில் வெளிச்சங்களைப் பாய்ச்சும் தெய்வங்கள் அவர்கள்.
அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் பூஜிக்கும் நாளே இந்த ஆசிரியர் தினம்.
என் இனிய மாணவர்த் தோழர்களே,
இன்னும்
10 அல்லது 20 வருடங்களில் நாம் ஒரு பொறியியலாளராகவோ, மருத்துவராகவோ,
விஞ்ஞானிகளாகவோ, கணினி நிபுணர்களாகவோ, ஏன் ஒரு பெரும் செல்வந்தராகவோ
இவ்வாழ்க்கைப் பாதையில் வலம் வரலாம். ஆனால் நம் ஆசிரியர்கள், இங்கேயே
இன்னும் நம்மைப் போன்று இன்னும் பல ஆயிரம் மாணவர்களுக்கு வாழ்க்கைப்
பாதைகளைக் காட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.
No comments:
Post a Comment